போதை பார்ட்டியில் கலந்துகொண்ட முன்னணி நடிகை காவல்துரையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போதை பார்ட்டியில் கலந்துகொண்ட முன்னணி நடிகை காவல்துரையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பார் ஸ்டார் மற்றும் முன்னணி நடடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து ஹீரோயினாக வந்த நடிகை நிஹாரிகா. இவர் நடிகர் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாக பாபுவின் மகள். இவர் ஹீரோயினாக ஒரு சில படங்கள் நடித்து இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாத நிலையில் நிஹாரிகா தமிழில் வேறு படங்களை நடிக்கவில்லை. இதனிடையே ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஐதராபாத் போலீசார், ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர். அனைவரும் தொழிலதிபர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தனர். அதில், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகளும், நடிகையுமான நிஹாரிகாவும் ஒருவர். இதை அடுத்து அங்கு இருந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களை விடுவித்துள்ளனர். அவர்களிடம் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு போதைப் பொருள் வழக்கில் யாரும் தப்ப முடியாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தான் முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது என்பதால் போதை பொருள் பயன்படுத்தினாரா உள்ளிட்ட விஷயங்கள் இனி தான் வெளியில் வரும் என தெரிகிறது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
