74 வயதாகும் இன்னிசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரும், நுரையீரல் பிரச்சனை உள்ளிட்ட மற்ற சில பிரச்சனைகளுக்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (செப்டம்பர் 25 ) பிற்பகல் 1 : 04 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டது.

மேலும் எஸ்.பி.பி சரண் நேரடியாகவே, செய்தியாளர்களை சந்தித்து இந்த தகவலை உறுதி படுத்தினார். எஸ்.பி.பி.யின் மறைவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, எஸ்.பி.பியின் மறைவுக்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் இரங்கல் ட்விட் இதோ...