நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 12-ம் வகுப்பு படித்து வரும் அவர், கடந்த ஒரு வாரகாலமாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உண்மை காரணம் தெரியவரும். இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் மரணத்தால் மனமுடைந்துபோன விஜய் ஆண்டனி திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், “விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீராவின் துரதிர்ஷ்டவசமான மறைவு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவின் நிரந்தர துக்கத்தை எத்தனை ஆறுதல் மற்றும் இரங்கல்களாலும் மாற்ற முடியாது. விஜய் ஆண்டனி, உங்கள் குடும்பத்திற்கு இந்த அளவிட முடியாத இழப்பை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தருவான் என்று நம்புகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... படிப்பினால் மனஅழுத்தம்... பிள்ளைங்கள free-யா விட்ருங்க - தற்கொலை குறித்த விஜய் ஆண்டனியின் பேச்சு..!

ராகவா லாரன்ஸ் போட்டுள்ள பதிவில், “உங்கள் மகளின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன், அவளுடைய ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன. விஜய் ஆண்டனி சார்.. இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மேலும் பலம் கொடுக்க ராகவேந்திர சுவாமியை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதிகாலையிலேயே இப்படி ஒரு அதிர்ச்சிகரமான செய்தியா! விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்தி. விஜய் ஆண்டனி மற்றும் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகளும், அனுதாபங்களும். இந்த வேதனையை போக்க கடவுள் வலிமை தரட்டும் என நடிகர் பிரசன்னா பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்...Vijay Antony daughter : அப்போ தந்தை... இப்போ மகள்! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சியில் விஜய் ஆண்டனி