கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், ஒட்டு மொத்த இந்தியாவையே கலங்க செய்தது,  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகன் விசாரணை என்கிற பெயரில் அழைத்து செல்லப்பட்டு, போலீசார் கொடுமையாக தாக்கி இவர்களை கொலை செய்த விவகாரம்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி தந்தை - மகன் இறப்புக்கு நீதி வேண்டும் என, பிரபலங்கள் முதல், தமிழகம் மட்டும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களும் தங்களுடைய கருத்தையும், கண்டனத்தையும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

இந்த பிரச்சனை குறித்து பிரபல பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் போலீசாருக்கு எதிராக, கருத்து தெரிவித்து,  வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இது வெளிநாடுகளுக்கும் பரவி, பலர் இந்த சம்பவத்திற்கு குரல் கொடுக்க துவங்கினர்.

பின்னர் மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது என்பதும் சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்தது என்பதும் முதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அதன் பின்னர் ஐந்து அதிகாரிகளும் என மொத்தம் 10 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வழக்கை ஏற்று நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் முக்கிய அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பாடகி சுசித்ரா வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் இது போலீசாருக்கு எதிராக தூண்டி விடுவதை போல் இருக்கிறது என்றும் இதனை யாரும் பகிர வேண்டாம் என கூறியிருந்தது.

இந்த அறிக்கையை கண்டு பதறியடித்தபடி, உடனடியாக...  அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் போலீசார் முடிந்தவரை இந்த வீடியோவை பகிர்ந்தவர்களும் நீக்க துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.