தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா.  இந்த படத்தை தொடர்ந்து 'கதகளி', 'கடம்பன்', 'கலகலப்பு 2 ', 'கதாநாயகன்' ஆகிய படங்களில்  நடித்தார்.

இப்போது 'நீயா' படத்தின் இரண்டாம் பாகத்திலும், சிம்புவுடன் 'வந்தா ராஜாவாகத்தான் வருவேன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.  சமீபகாலமாக அவருக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. இதனால், கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டும், நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டும், ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளானார்.

இப்படி அரைகுறை உடைகளோடு புகைப்படங்கள் வெளியிடலாமா என சிலர் சமூக வலைத்தளத்தில், நேரடியாகவே அவரிடம் கேட்டனர். 

இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் கேத்தரின் தெரசா, புதிதாக வீடு வாங்கி இருக்கிறாராம்.  இதன் விலை ரூபாய் இரண்டரை கோடி என கூறப்படுகிறது. 

ஒரு படத்துக்கு சில லட்சங்களை மட்டுமே சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரேசா, கோடிக்கணக்கில் ஆடம்பர வீடு வாங்கியது பற்றி தெலுங்கு இணையதளத்தில் சர்ச்சை ஒன்றும் கிளம்பியுள்ளது.  திரையுலகினர் மத்தியில் இது விவாதமாகவும் மாறி இருக்கிறது.

இவர் கோடிக்கணக்கில் வீடு வாங்க காரணம் பட தயாரிப்பாளர் ஒருவர்தானாம். இவர் தற்போது கேத்தரின் விரித்த வலையில் சிக்கியுள்ளாராம். மேலும் விரைவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் இவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கம் ஐடியாவும் உள்ளதாம்.  இவர்கள் iஇருவரைப் பற்றியும் இணைத்து பல கிசுகிசுக்களை எழுந்துள்ளது. இதற்க்கு கேத்தரின் என்ன பதில் சொல்வர் என பொறுத்திருந்து பார்ப்போம்.