கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. லாக்டவுன் நேரத்தில் வெறும் வாய்க்கு அவுல் கிடைத்தது போல் பலரும் இதைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்தனர். 

 

இதையும் படிங்க: போலீசார் என்னை இரவு முழுவதும்... கதறி அழுது வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி... வனிதாவுக்கு மீண்டும் சவால்...!

இந்நிலையில் தன்னைப் பற்றி யூ-டியூப்பில் அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சூர்யா தேவி மீது வனிதா புகார் அளித்தார். அந்த புகாரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி அவதூறு பரப்புவதாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார். 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

இதனிடையே அனைவர் மீதும் அடுக்கடுக்கடுக்கான புகார்களை கொடுத்து வந்த வனிதா மீதே அதிரடியாக ஒரு புகார் பறந்து, அதன் மீது உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வனிதா விஜயகுமார் கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.