Avinash Das : போட்டோ போட்டது குத்தமா..! அமித்ஷாவின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு

Avinash Das : அமித்ஷா புகைப்படத்தை பகிர்ந்ததற்காக இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

case filed against Director Avinash das for sharing Amitshah's photo


அனார்கலி ஆஃப் ஆரா என்கிற பாலிவுட் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் அவினாஷ் தாஸ். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்காக அவர் மீது அஹமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பண மோசடி வழக்கில் சிக்கி கைதான ஜார்க்கண்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பூஜா சிங்கால், அமித் ஷா உடன் பேசும் போது எடுத்த புகைப்படத்தை அவினாஷ் தாஸ் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாம், ஆனால் அவினாஷ் தாஸ் தனது பதிவில் அது பூஜா சிங்கால் கைதாவதற்கு முந்தைய நாள் எடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அவதூறு பரப்ப முயல்வதாக கூறி அவினாஷ் தாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர பெண் ஒருவர் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணம் அச்சிடப்பட்ட உடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தமைக்காகவும் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

case filed against Director Avinash das for sharing Amitshah's photo

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா புகைப்படத்தை பகிர்ந்ததற்காக இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... O2 Teaser : மகனை கொல்ல முயல்பவர்களுக்கு மரண பயத்தை காட்டும் நயன்தாரா... திகில் கிளப்பும் ஓ2 டீசர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios