O2 Teaser : மகனை கொல்ல முயல்பவர்களுக்கு மரண பயத்தை காட்டும் நயன்தாரா... திகில் கிளப்பும் ஓ2 டீசர்
O2 Teaser : ஓ2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகில் கிளப்பும் காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ஓ2 (O2). திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கி உள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஓ2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் நடிகை நயன்தாரா 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்து இருக்கிறார்.
இப்படத்தின் கதைப்படி ஒரு தாய் தனது மகனுடன் பேருந்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகிறார். நுரையீரல் பிரச்சனையால் அவதிப்படும் அவரது மகனிடம் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று இருக்கும், விபத்தில் சிக்கியபின் சக பயணிகள், அந்த ஆக்சிஜன் சிலிண்டரை குறிவைக்கின்றனர். அவர்களிடம் இருந்து தனது மகனை அந்த தாய் எப்படி காப்பாற்றினார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் இந்த ஓ2.
இப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஓ2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகில் கிளப்பும் காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Kamal haasan : கமலின் ‘அந்த’ முடிவால் கதறி அழுத சிம்புவின் தந்தை... பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை