இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகையும் ,மாடல் அழகியுமான காரா டெலிவிஞ்ச், கூரியருக்கு மட்டும் ரூ.18  லட்சம் செலவு செய்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து போஸ்ட்மேட்ஸ் என்ற கூரியர் நிறுவனம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார். இந்த நிறுவனம் உணவு, மளிகை பொருட்கள், மதுபானம் போன்றவற்றை ஆர்டர் செய்தால் அவற்றை கடையில் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கும்.  

இதற்காக தனி கட்டணம் வாங்கி கொள்ளும். இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 482 தடவை பொருட்களை காரா ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார். 1038 பொருட்களை 234 கடைகளில் இருந்து வாங்கி காராவுக்கு இந்த நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

இதற்காக இந்த போஸ்ட்மேட்ஸ் கூரியர் நிறுவனத்துக்கு மட்டும் ரூ 17 .8 லட்சத்தை காரா செலவு செய்து இருக்கிறார். கூரியர் கம்பெனிக்கு லட்ச கணக்கில் அவர் செலவு செய்துள்ளதை ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகிறார்கள்.