விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவியும் தொண்டர்கள்... இறுதிச்சடங்கு எப்போது? முழு விவரம் இதோ

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Captain Vijayakanth funeral will happen tomorrow december 29 gan

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். விஜயகாந்தின் மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும், அரசியல் தலைவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்தின் உடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்ட நிலையில், அவரது உடலை சென்னை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றும், நாளையும் தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத பிரேமலதா... கலங்க வைக்கும் போட்டோஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios