ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடா அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது அவரை மர்ம ஆசாமிகள் வழிமறித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து ஜூப்லி ஹில்ஸ் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே ராகேஷ் ரெட்டி என்பவர் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

தற்போது தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்யா பிரசாத்தும் கைதாகியுள்ளார். மேலும் அவரது உதவியாளர் கிஷோர், நடிகை அஞ்சு ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெலுங்கு திரைபிரபலங்கள் சத்ருபதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.