லண்டன் நகர பேருந்துகளில் மாசாக வலம் வரும் லியோ.. வேற லெவல் ப்ரோமோஷனில் இறங்கிய படக்குழு - வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், லண்டன் நகரிகளிலும் முழு வீச்சில் பிரமோஷன் பணிகள் நடந்து வருகிறது.

Bus with leo movie posters Thalapathy vijay leo movie promotion work starts in London ans

இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இரண்டாவது முறையாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து, தளபதி விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெண்பனி நடுவே... குடும்பத்தோடு குதூகலம் பண்ணும் தளபதி! புதிய போஸ்டரும் 'லியோ' மூன்றாவது சிங்கிள் அறிவிப்பு!

பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் அவர்களுடன் மீண்டும் நடிகை திரிஷா ஜோடி சேர, பார்த்திபன் மற்றும் லியோ என்கின்ற இரு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்பட்டாலும், மக்கள் பலரும் லியோ திரைப்படத்தை ஆர்வமாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் லியோவாக நடிக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு அண்ணனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

லோகேஷ் கனகராஜின் LCUவிற்குள் லியோ திரைப்படம் வருமா? இல்லையா? என்பதே ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் லண்டன் நகர பேருந்துகளில் லியோ திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ப்ரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து வெளியான காணொளி ஒன்று தற்பொழுது இணையத்தில் விஜய் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

விஷால் - எஸ்.ஜே.சூர்யா சிலுக்கோடு வந்து மாஸ் காட்டிய 'மார்க் ஆண்டனி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios