'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணனின், மகனும் தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணனின், மகனும் தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குழந்தைகள் ரசிக்கும் விதமாக, குரங்கு, நாய், யானைகள் என்று... வித்தியாசமான படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளவர் ராமநாராயணன். இவரது மறைவிற்கு பின்னர், இவருடைய மகன் மற்றும் மருமகள் ஆகியோர் 'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' சார்பில் படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் கடைசியாக இவர் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதைத்தொடர்ந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு பின், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படத்தை தயாரித்து வருகின்றனர்.

மேலும் தேனாண்டாள் முரளி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். தமிழ் திரையுலகின் நலன் கருதி, சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து, திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, பாதிக்கப்படும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.

இந்நிலையில் தற்போது இவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெற வேண்டும் என திரையுலகத்தினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.