Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை ஒரு அரசியல் ‘கோமாளி’என்று நக்கலடிக்கும் ஜெயம் ரவி படம்...’எச்சத்தனம்’ என்று கொந்தளிக்கும் ரசிகர்கள்...

மிக விரைவில் வெளியாகவிருக்கும் ஜெயம் ரவியின் ‘கோமாளி’படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து படு பயங்கர நக்கலடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அதைக்கண்ட ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

BoycottComali began trending on Twitter soon after by fans who found the joke in bad taste
Author
Chennai, First Published Aug 4, 2019, 10:21 AM IST

மிக விரைவில் வெளியாகவிருக்கும் ஜெயம் ரவியின் ‘கோமாளி’படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து படு பயங்கர நக்கலடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அதைக்கண்ட ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர்.BoycottComali began trending on Twitter soon after by fans who found the joke in bad taste

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருக்கிறார்கள்.

இந்த சர்ச்சையால் வெளியான ஒரே நாளில் 16 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில் தங்கள் தலைவரை தரைமட்டமாகத் தாக்கியுள்ளதால் #BoycottComali @RajnikanthEFans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இந்த எதிர்ப்பால் அக்காட்சியை நீக்கப்போகிறார்களா அல்லது கெத்தாக ரஜினி ரசிகர்களை எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios