Asianet News TamilAsianet News Tamil

"பூம் பூம் பூம்" பாடல் அனுபவம் பற்றி மனம் திறந்த நிகிதா காந்தி...

boom boom boom song singer nikitha gandhi open talk
boom boom boom song singer nikitha gandhi open talk
Author
First Published Aug 13, 2017, 12:27 PM IST


ஒரு படத்தின் 'சிங்கிள் ட்ராக்' கை முதலில் ரிலீஸ் செய்வது வழக்கமாகிவிட்டாலும், அதில்  ஒரு சில பாடல்களே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாடவைக்கும் . A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் , ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில்  உருவாகிவரும் 'ஸ்பைடர்' படத்தின் 'பூம் பூம்' பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபகாலமாக பல ஹிட் பாடல்களை பாடி கலக்கிக்கொண்டிருக்கும் நிகிதா காந்தி இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் குறித்து நிகிதா காந்தி பேசுகையில் , '' எனது இசை பயணம் சுவாரஸ்யமானது. சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் BDS படித்துக்கொண்டிருந்தபொழுது தான் முதல் முறையாக, ரஹ்மான் சாருக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. 

அதன் பிறகு வரிசையாக வாய்ப்புகள் வர, பின்னணி  பாடகியானேன். இந்த 'பூம் பூம்' பாடல் தான் நான் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் பாடும் முதல் பாடல். அவருடன் பணிபுரிவது ஒரு அற்புதமான அனுபவம். தனக்கு வேண்டிய தரம் பெரும் வரை அயராது உழைப்பார். 

முருகதாஸ் சார், வெளிப்புறத்தில் அமைதியாக இருந்தாலும் தன் அணியுடன் சகஜமாக குறும்புத்தனமான பழகுபவர். மகேஷ் பாபு போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் படத்தில் பாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதற்கு முன்பு நான் பல வகையான பாடல்களை பாடியிருந்தாலும் இந்த 'பூம் பூம்' பாடல் மிக ஸ்டைலானது.'' தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி   'ஸ்பைடர் படத்தின் டீஸர் வெளியாகி சில தினங்களிலேயே எட்டு  மில்லியன் வியூஸ் தாண்டி  அசத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios