Sushmita Sen date with 12 Celebrities in Tamil : ஒரு காலத்தில் பாலிவுட் திரையுலகை கலக்கியவர் அந்த 50 வயதை நெருங்கும் நட்சத்திர நடிகை. திரையுலகில் இதுவரை 12 பேருடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் யார் தெரியுமா?

Sushmita Sen date with 12 Celebrities in Tamil : பொதுவாக சினிமா என்றாலே சர்ச்சை இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும் சர்ச்சையில் சிக்காத நடிகர், நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. ஆனால், சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் இந்த 50 வயதை நெருங்கும் நடிகை. யார் அந்த நடிகை என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

80ஸ் காலகட்டத்தை சேர்ந்த நடிகைகள் பெரும்பாலும், நடிகர்களையோ அல்லது தொழிலதிபர்களையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர். 90-களுக்கு பின்னர் நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் நடிக்க தொடங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது காலம் மாறி விட்டதால் திருமணம் ஆகி, விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும் கூட சில நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

அதே போல் ஒரு சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து, காதல் சர்ச்சைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகையைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கிறோம். அந்த நடிகை வேறு யாருமில்லை. அவர் தான், பாலிவுட்டின் மூத்த அழகி சுஷ்மிதா சென். இவர் ஹைதராபாத்தில் 1975ல் பிறந்தார். மிக இளம் வயதிலேயே மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1994 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 1996 இல் 'தஸ்தக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டார். 50 வயது நெருங்கிய போதிலும் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கிட்டத்தட்ட 12 நடிகர்களுடன் டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதில் ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன. லலித் மோடியுடன் சுற்றித் திரிந்த அவர், பின்னர் பிரிந்து விட்டார்.

சுஷ்மிதா சென் சுதந்திர சிந்தனையுள்ள நடிகை. திருமணம் என்பது அவரது எண்ணத்திலேயே இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல், டேட்டிங் மூலம் காலத்தைக் கழித்த மூத்த அழகி, இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதே போல் தன்னைக் காட்டிலும் இளையவர்களுடன் கூட சுஷ்மிதா சென் டேட்டிங் செய்த சம்பவங்களும் உண்டு.

தனக்குப் பிடித்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் சுஷ்மிதா சென், சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் சுஷ்மிதாவிற்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.