2020ம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே திரைத்துறையினரின் மரணம் தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. பாலிவுட்டில் நடிகர்கள் இர்பான் கான்,  ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை ஆகியன ஓட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று காரணமாக சின்னத்திரை பிரபலங்களும், உச்ச நட்சத்திரம் முதல் துணை நடிகர்கள் வரை பலரும் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் இறப்பதும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. 

 

இதையும் படிங்க: காதலருக்கு லிப்லாக்... முன்னாள் ஆபாச நடிகை பூனம் பாண்டேவின் அட்ராசிட்டி வீடியோ...!

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பழம் பெரும் நடிகையான கும்கும் மரணமடைந்த செய்தி இந்தி பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1954ம் ஆண்டு ஆர் பார் என்ற படத்தில் அறிமுகமான கும்கும் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, சன் ஆஃப் இந்தியா, மதர் இந்தியா, உஜாலா, கோகினூர் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

சாஜித் அக்பர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட கும்கும் அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது 86 வயதாகும் கும்கும், முதுமை காரணமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு மஜ்காவ் தகன மையத்தில் நடைபெற்றது. பாலிவுட்டின் மூத்த நடிகையான கும்கும் மரணத்திற்கு இந்தி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.