பாலிவுட் பழம்பெரும் நடிகை ஷப்னா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கி, தற்போது அவருக்கு மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ராஜேஷ் பாண்டுரங் ஷிண்டே என்பவர் நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் டிரைவர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், நடிகையின் கார் டிரைவர் யோகா காமத் அதிவேகமாக மும்பை நெடுஞ்சாலையில், அப்போது நிலை தடுமாறி முன்னால் சென்ற ராஜேஷ் பாண்டேவின் டிரக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி தலையில் பலத்த காயமும், முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

மும்பை அந்தேரியில் உள்ள அதிநவீன சிகிச்சைகள் கொண்ட தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் ஷபானா ஆஸ்மியின் கணவர் ஜாவித் அக்தர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 

பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வருவது பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.