தி கேரளா ஸ்டோரி.. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படம் - பிரபல பாலிவுட் நடிகை சானியா மிர்!
பிரபல காஷ்மீரி நடிகையான சானியா மிர், இந்தி திரையுலகில் தற்போது தனது தடத்தை மிக ஆழமாக பதித்து வருகின்றார் என்று தான் கூறவேண்டும்.

தனது அசாதாரண திறமை மற்றும் வசீகரிக்கும் நடிப்பால் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார் சானியா. மத்திய காஷ்மீரில் உள்ள சிறிய நகரமான கந்தர்பால் பகுதியைச் சேர்ந்தவர் அவர்.
லைலா மஜ்னு, நோட்புக் மற்றும் சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது. தனது பயணத்தைப் பற்றி பகிர்ந்துள்ள சானியா, "எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன், என் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
லைலா மஜ்னு (2018) படத்தில், அர்ஷி தில்பராக நடித்ததன் மூலம் ஹிந்தித் திரையுலகில் சானியா அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய நடிப்பு விமர்சன ரீதியான நல்ல பாராட்டுகளைப் பெற்றது. தற்போது தனது ஆரம்ப கால வெற்றியை நினைவு கூர்ந்த சானியா, "அர்ஷி தில்பர் கதாபாத்திரத்தில் நடித்தது எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு கலைஞனாக எனது எல்லைகளைத் தாண்டி புதிய எல்லைகளை ஆராய அது எனக்கு நம்பிக்கையை அளித்தது" என்றார்.
கல்லூரியில் நடந்த விழா.. மேடையில் கடுப்பான லோகேஷ் கனகராஜ் - கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்!
சானியாவின் குடும்பத்தின் அசைக்க முடியாத ஆதரவுடனும், தனது சொந்த உறுதியுடனும், அவர் சமூக விதிமுறைகளை மீறி தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். தனது சினிமா பயணத்தைப் பற்றிப் பேசிய சானியா, "என்னை எப்போதும் நம்பியதற்காக எனது குடும்பத்தினருக்கு நான் நன்றியுள்ளவளாக எப்போதும் இருப்பேன் என்றார்.
"என் சினிமா பயணத்தில் என் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு முதுகெலும்பாக இருந்தது. மற்ற பெண்களும் தங்கள் கனவுகளை அச்சமின்றி தொடர எனது கதை ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்" என்றார் சானியா. தனது நடிப்பு வாழ்க்கையைத் தாண்டி, சானியா பல்வேறு பொழுதுபோக்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். சானியா ஒரு எழுத்தாளர், தோட்டக்கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர்.
இந்தி திரையுலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் போன்ற பல நடிகர்களின் திறமையை வியந்து பாராட்டிய சானியா, தனது ரோல் மாடல்களைப் போல தானும் ஒரு தாக்கத்தை உருவாக்கி செல்ல விரும்புவதாக கூறினார்.
பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக, தனது வரவிருக்கும் திட்டங்களின் மூலம், சானியா பார்வையாளர்களை மேலும் கவரவும், சினிமா உலகில் தனது உயர்வைத் தொடரவும் தயாராக உள்ளார். பெரிய கனவுகாணத் துணியும் மற்றும் தங்கள் சொந்த திறன்களை நம்பும், ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு சானியாவின் கதை ஒரு உத்வேகமாக உள்ளது.
சானியா தனது சமீபத்திய படங்களை பற்றி பேசுகையில், "தி கேரளா ஸ்டோரி' படத்தில் பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவமாக இருந்தது என்றும், அந்த கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு கதை என்றும் கூறினார். சானியா தனது திரைப்பட பணிகளை தவிர, ஜீ டிவியில் "இஷ்க் சுப்ஹானல்லா" மற்றும் "நார் தி ஃபயர்" போன்ற பிரபலமான தொடர்களிலும் நடித்துள்ளார்
ஒரு கலைஞனாக திரைப்படம் மாற்றும் தொலைக்காட்சி என்று எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் முறையாக பயன்படுத்திக்கொள்கிறேன். அதே சமயம் எனக்கான வாய்ப்புகளை கொடுப்பவர்களுக்கு நன்றியுள்ளவளாகவும் இருக்கின்றேன் என்றார் சானியா. சானியா தனது நடிப்பை கவனித்து வரும் அதே நேரத்தில், இசை துறையிலும் தனது தடத்தை பதித்துள்ளார். தெரியன் யாடன், ஹாட் கேர்ள், தேரா சூப்பர்மேன், பக்வானோ, பெராங் மற்றும் எஹ்சாஸ் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க பாடல்களில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இசைத் தேடலைப் பற்றிப் பேசிய சானியா, "இசை என்னை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திக்கொள்ள உதவுகிறது என்றார்.
அட்ரா சக்க..! 'ஜெயிலர்' இசை வெளியிட்டு விழா எப்போது தெரியுமா? இடம் - தேதி அறிவிப்பு!