Asianet News TamilAsianet News Tamil

கல்லூரியில் நடந்த விழா.. மேடையில் கடுப்பான லோகேஷ் கனகராஜ் - கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்!

மேடையில் மாணவி ஒருவர் செய்த செயலைக் கண்டு கடுப்பான லோகேஷ் கனகராஜின் செயல் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது twitter பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

Blue Sattai Maran Tweet about Director Lokesh Kanagaraj video in college function
Author
First Published Jul 22, 2023, 4:12 PM IST

லோகேஷ் கனகராஜ் கோவையை சேர்ந்தவர், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இவருடைய புகழை இந்திய அளவில் பிரபலமாக்கியது. 

தற்பொழுது தளபதி விஜய் அவர்களை கொண்டு லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்திய திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளை லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டு வருகிறார். 

அதிர்ச்சி... சார்லி சாப்ளினின் மகள் ஜோசஃபின் மரணம்!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார் லோகேஷ் கனகராஜ். அப்பொழுது அவரிடம் விருது பெற வந்த ஒரு மாணவி, அவருடைய காலில் விழுந்த நிலையில், அவர் சட்டென்று கோபப்பட்டு அந்த மாணவரிடம் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார். 

இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோவை கோடிட்டு பேசியுளளார் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த மாணவர்களை 2K Boomers என்று கூறிய அவர், "லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அந்த மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தின் உள்ளே பிரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை, இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறபோகிறதோ" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உச்சகட்ட அதிர்ச்சியில் ஜனனி? குணசேகரனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போடும் ஜீவானந்தம்! பரபரப்பான அப்டேட்!

Follow Us:
Download App:
  • android
  • ios