bollywood actress reema laagu death
பழம் பெரும் பாலிவுட் நடிகை ரீமா லாகு மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மூன்று மணியளவில் உயிரிழந்தார்.
சமீப காலமாக வயது மூப்பு மற்றும் உடல் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் என உயிரிழந்த சம்பவம் பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெய்னே பியார் கியா படத்தில், சல்மான்கானிற்கு அம்மாவாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றவர். 1970 ஆம் ஆண்டுமராத்தி மொழியில் நடிக்க ஆரம்பித்து இவர் பின் ஹிந்தியில் நடித்தார்.
திருமணமான சில வருடங்களிலேயே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவருக்கு மிருமாயீ என்கிற மகள் உள்ளார். இவரும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
ரீமா லாகுவின் மறைவிற்கு பாலிவுட்டை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
