bollywood actress mumtaz death

பாலிவுட் திரையுலகில் 70களில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் பழம்பெரும் நடிகை மும்தாஜ். இவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது 70 வயதாகும் இவர், தன்னுடைய குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் மும்தாஜ் இறந்துவிட்டதாக சமூகவலைத்தளத்தில் படுவேகமாக ஒரு தகவல் பரவியது. 

இந்நிலையில் அவருடைய இளைய மகள் தன்யா மத்வானி, இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், தன்னுடைய தாய் நலமாக இருப்பதாகவும். அவர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தாய் பற்றி இதுபோன்ற தகவல் பரவியதும் உடனடியாக அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார். அதே போல் ரசிகர்கள் இது போன்று பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.