தமிழில் "தாம் தூம்" திரைப்படத்தில்  ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா. இந்தப்  படத்தைத் தொடர்ந்து இவருக்கு பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும், அழுத்தமான கதாபாத்திரம் இல்லாததால் தமிழில் பட வாய்ப்புகளை ஏற்கவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

தற்போது முழு நேர பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் கங்கனா சிறந்த நடிகைக்காக குயின் மற்றும்  தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்  ஆகிய படங்களுக்காக கடந்த இரண்டு வருடமாக  தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றார்.

இவர் அண்மையில், பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் தனக்கு ஏற்பட்ட காதல் மற்றும் தன்னை அசிங்கப்படுத்திய இயக்குனர் கரண் ஜோகர் குறித்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தற்போது ஒரு புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

அது என்னவென்றால் ...  52 வயதான பிரபல பாலிவுட்  நடிகர் ஆதித்யா பஞ்சோலி தன்னை வீட்டுச் சிறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியுள்ளார். மேலும், அவருடைய மகளை விட எனக்கு ஒரு வயது குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த ஆதித்யா, ‘கங்கனாவிற்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.