Bollywood actress advice for upcoming actresses how to fa sexual harassment
திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து, பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் வெளிப்படையாக அளித்த பேட்டியை தொடர்ந்து, வெளிஉலகிற்கு நடிகைகள் சந்திக்கும் பலபிரச்சனைகள் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து மனம் திறந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், சிறுவயது முதலே சின்னத்திரையிலும் வெள்ளித்திறையிலும் நடித்துவருபவர். மிகவும் தைரியமான பெண்ணும் கூட.
வளர்ந்து வரும் நடிகையான இவர் பல பாலிவுட் நடிகைகளுக்கு கடும் போட்டியாக கருதப்படுகிறார். சமீபத்தில் கூட இவர் நடித்திருக்கும் ராஸ் என்ற ஹிந்தி திரைப்படம், திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தற்போது நடைபெற்ற ஒரு பேட்டியின் போது இவரிடம், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை, படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் கூறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆலியா ”பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகும். நடிக்க வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறைக்கு வருபவர்களிடம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். யாராவது உங்களை படுக்கைக்கு அழைத்தால், உடனே உங்கள் பெற்றோரிடம் தெரிவியுங்கள். அவர்கள் துணையுடன் காவல் துறையிடம் புகார் அளியுங்கள்” என அறிவுரை கூறியிருகிறார்.
