பாலிவுட் உலகின் கிங்காக விளங்கி வரும் நடிகர் ஷாருக்கான் தனது 59 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ் உடன் 20 வயது இளைஞர் போல் தோற்றமளிக்கிறார். அவரது டயட் சீக்ரெட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முன்பு பேட்டி ஒன்றில் பேசிய ஷாருக்கான் தான் தினமும் இருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். மதியம் மற்றும் இரவு மட்டுமே உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும், நொறுக்குத் தீனிகளை உண்பதே இல்லை என்று கூறியுள்ளார். உணவில் முளைகட்டிய தானியங்கள், கிரில் சிக்கன், பிரக்கோலி அதிகம் சேர்த்துக் கொள்வதாகவும், எப்போதாவது பருப்பு வகைகள் எடுத்துக் கொள்வதாகவும், பல ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றி இதே போலத்தான் உணவு உட்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
விமானத்தில் செல்லும் பொழுது அல்லது விருந்தினர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது அவர்கள் கொடுக்கும் உணவை வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவேன். பிரியாணி, ரொட்டி, நெய், லஸ்ஸி என்று எது கொடுத்தாலும் வேண்டாம் என்று கூற மாட்டேன் என ஷாருக்கான் கூறியுள்ளார். தினமும் இரண்டு வேளை அதுவும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்வது தனக்கு போர் அடிக்கவில்லை என்றும், பல ஆண்டுகளாக இந்த உணவு முறையை பின்பற்றி ஒரு வருவதால் அது தனக்கு பழகிவிட்டது என்றும், அதனால் சீட் டேஸ் செய்வது கிடையாது என ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஷாருக்கான் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் தங்கள் உணவில் கவனமும், அக்கறையும் செலுத்தி வருகின்றனர். அதனால் தான் அவர்கள் அழகான மற்றும் இளமையான தோற்றத்தோடும், நீண்ட ஆயுளோடும் விளங்குகின்றனர்.
