RRR : ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஏராளமான பாசிடிவ் விமர்சனங்கள் வரும் நிலையில், பிரபல இந்தி நடிகரும் விமர்சகருமான கமால் கான் இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், உலகமெங்கும் இன்று ரிலீசாகி உள்ளது. பாகுபலி 2 படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. காலை முதலே பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏராளமான பாசிடிவ் விமர்சனங்கள் வரும் நிலையில், பிரபல இந்தி நடிகரும் விமர்சகருமான கமால் கான் இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜமவுலியை ஜெயில்ல போடனும்

ஆர்.ஆர்.ஆர் படத்தைப் திரையரங்கில் பார்த்த கே.ஆர்.கே எனும் கமால் ரசித் கான், இதனை மோசமான படம் என டுவிட் செய்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது : “இந்தப் படத்தை எடுத்தது தவறு என்று சொல்லமாட்டேன். இது மிகப்பெரிய குற்றம்.. 600 கோடி ரூபாய் செலவில் இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்த இயக்குனர் ராஜமவுலிக்கு குறைந்தது 6 மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும்” என சாடியுள்ளார்

மற்றொரு பதிவில், “இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மோசமான படத்தை பார்த்ததில்லை. ராஜமவுலி சார் என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டீர்கள். என் அறிவு எல்லாம் இன்று பூஜ்ஜியமாகிவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட்ட மிக மோசமான படம் இது” என நடிகர் கமால் கான் விமர்சித்து உள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... salman khan :சூப்பர்ஸ்டார் மீதுள்ள நட்புக்காக நடிச்சேன்... காசு வேணாம்- ரூ.20 கோடியை வாங்க மறுத்த சல்மான் கான்

Scroll to load tweet…
Scroll to load tweet…