bollywood actor arjun rampal divorce her wife

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், கடந்த 1998 ஆம் ஆண்டு, மெஹர் ஜெசியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 20 வருடம் சந்தோஷமாக வாழ்ந்த இவர்களுடைய வாழ்க்கைக்கு விவாகரத்து முற்று புள்ளி வைத்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுவது, பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னால் மனைவி சூசன் தான். 

அர்ஜுன் ராம்பல் மற்றும் சூசன் ஆகியோருக்கு நெருங்கிய நட்பு உள்ளதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதனால் அர்ஜுனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பின் இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்து. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அருஜுன் ராம்பாலும் அவரது மனைவியும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் நலன் குறித்து இருவரும், இணைந்தே முடிவெடுப்போம் என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.