தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, மகள் முத்ரா மற்றும் மனைவி ரேஷ்மியுடன் அவுட்டிங் சென்றபோது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பலர் பாபி சிம்ஹாவின் மகள் முத்ராவை பார்த்து மிகவும் கியூட்டாக உள்ளதாக கூறி வருகிறார்கள்.

'காதலில் சொதப்புவது எப்படி' , 'பீசா' , 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான பாபி, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், ஈர்ப்பின் காரணமாகவும், பல்வேறு போராட்டங்களுக்கு பின் தேசிய விருதை பெரும் அளவிற்க்கு உயர்ந்தவர்.

இவர் 'ஜிகிர்தாண்டா' படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, இவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இவருடைய நடிப்பிற்கு பல ரசிகர்களும் உள்ளனர். 

இவர் 'உறுமீன்' படத்தில்  நடித்த போது, நடிகை ரேஷ்மியை காதலித்தார். இவர்களுடைய காதல் திருமணத்திலும் முடிந்தது. தற்போது இவர்களுக்கு முத்ரா என்கிற அழகான பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில், 'அக்னி தேவி' படத்தில் தனக்கு பதிலாக மற்றொரு நடிகரை வைத்து எடுத்துவிட்டதாக, புதிய சர்ச்சையை எழுப்பினர். இந்த புகார் தயாரிப்பாளர் சங்கம் வரை சென்று, பாபி சிம்ஹாவிற்கு ரெட் கார் போடுவது அளவிற்கு பிரச்சனை சென்றது.

தற்போது இந்த பிரச்சனையெல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, பாபி சிம்ஹா தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் அவுட்டிங் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக பாபி சிம்ஹாவின் தோல் மீது அமர்ந்துள்ளது மகள் முத்ரா அனைவருடைய பார்வையையும் ஈர்த்துள்ளார்.