கொடைக்கானலில் விதிமீறி பங்களா கட்டியதோடு.. காசு கொடுக்காம ஏமாத்துகிறார் - பாபி சிம்ஹா மீது நண்பர் பகீர் புகார்
கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் நடிகர் பாபி சிம்ஹா விதிமீறி பங்களா கட்டி உள்ளதாக அவரது நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடிகர் பாபி சிம்ஹாவின் நண்பர் உசைன் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசியதாவது : நானும் பாபி சின்ஹாவும் பள்ளி பருவ நண்பர்கள். கட்டிட ஒப்பந்ததாரரான எனது உறவினரை நடிகர் பாபி சிம்ஹாவுக்கு நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன்.
கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் உள்ள நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டுவதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எனது உறவினருக்கும், நண்பருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆகையால் அவருக்கு ஒப்பந்த தொகையில் பாதி வழங்கவில்லை.
இதையும் படியுங்கள்... சென்னையில் ஜவான் FDFS பார்க்க கோலிவுட் படையோடு கிளம்பி வந்த அட்லீ - வைரலாகும் போட்டோஸ்
இதுகுறித்து நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் எனது நண்பரான பாபி சிம்ஹா என் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி, தான் மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்படி என் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் பாபி சிம்ஹா, தற்போது கட்டிய பங்களா, விதி மீறி கட்டப்பட்டு இருக்கிறது. அதில் அனுமதி இல்லாமல் மலைப்பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் வெடி மருந்து போன்றவை கொண்டு செல்லப்பட்டது. அதற்கான ஆதாரமாக புகைப்படங்களும் உள்ளன. மேலும் பாபி சிம்ஹா மீது வழக்கு தொடர உள்ளதாக உசைன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... லாக்டவுன்ல 350 கோடிய எடுத்து கொடுத்தாரு... ஷாருக்கானின் அந்த மனசு இருக்கே! மெர்சலாகிப்போன அட்லீ