bobby simha and reshmi menon divorce

'உறுமீன்' படத்தில் ரேஷ்மிமேனனுடன் இணைந்து நடித்த போது, ரேஷ்மி மேனனுக்கும், பாபி சிம்ஹாவிற்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதால் இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது.

சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக பல மூறை தகவல்கள் வெளியானது. பின் அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க பாபி தான் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில் மனைவியுடன் கலந்துக்கொண்டு முற்றுப் புள்ளி வைத்தார்.

தற்போது பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி இருவருமே படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில். மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளதாகவும். இதன் காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது .

இந்த விவாகரத்து செய்தி எப்படியோ பாபி சிம்ஹா காதுக்கு செல்ல அவரோ, இந்த செய்தியில் உண்மை இல்லை, யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் நான் என் மனைவியுடனும் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.