இதுதான் மடோன் அஸ்வின் காப்பி அடிச்ச 2 ஆங்கில படங்கள் - ஆதாரத்தை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்!
இயக்குனர் மடோன் அஸ்வின் எடுத்த இரண்டு படங்களும், இருவேறு ஹாலிவுட் படங்களின் காப்பி என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில், அதை மேற்கோள்காட்டி OVOP என்ற கெட்ட வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, பின் அதற்கு தற்பொழுது வேறு ஒரு அர்த்தத்தை கொடுத்து ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன் அவர்கள்.
இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, நேற்று அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் "ஒரு இயக்குனர், அவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்பொழுது அவர் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு வருகிறது, மேலும் அது ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்று ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது".
"தற்பொழுது அவர் எடுத்த முதல் திரைப்படமும் ஒரு ஆங்கில திரைப்படத்தின் காபி தான் என்று தெரிய வந்துள்ளது. அந்த படத்தின் தலைப்பு ஒரு பெரிய தலைவரின் பெயர், கடந்த 2021ம் ஆண்டு அந்த படம் வெளியானது. அந்த படத்திற்காக அறிமுக இயக்குனரான அவர் தேசிய விருதும் பெற்றார்", இந்நிலையில் அவர் யார், அவர் காப்பியடித்த இரண்டு திரைப்படங்கள் என்ன என்பதை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக ப்ளூ சட்டை மாறன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் அறிவித்தது போலவே கடந்த 2008ம் ஆண்டு ஹாலிவுட் உலகில் வெளியான Swing Vote என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் மண்டேலா திரைப்படம் என்றும். 2006ம் ஆண்டு வெளியான Stranger than Fiction என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் மாவீரன் படம் என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.