Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை சாடும் ப்ளூ சட்டை மாறன்.. ஏன்?.. அன்று மாறன் கூறிய அதே கெட்ட வார்த்தையை ரிப்பீட் செய்த ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள உள்ள ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

Blue Sattai Maran about Rajinikanth Speech in Jailer Audio Launch
Author
First Published Jul 29, 2023, 2:27 PM IST

இந்த நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், பல கருத்துக்களை முன் வைத்தார். அதில் "காகம் என்பது ஒரு இடத்தில் இருக்காது, அங்கும் இங்கும் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும், ஆனால் பருந்து அப்படிப்பட்டதல்ல அது அமைதியானது", காகம் உயர பறந்து சென்று பருந்தை கொத்தினாலும், பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது", காகம், பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும், ஆனால் முடியாது, அது கீழே விழுந்து விடும்" என்று கூறினார். 

மேலும் "ரஜினி யாரை காகம் என்ன கூறினார் என சமூக வலைதளத்தில் எழுதுவார்கள்" என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தன்னைத்தான் காகம் என்று ரஜினி கூறியதாக தெரிவித்து ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்கள்.. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பின்வருமாறு...

பருந்து மக்களிடம் ஒன்றி வாழாது. உயரத்தில் தனியே திரியும். காகம் மனிதர்களுடன் வாழும். பருந்து சிறப்பு விருந்தை உண்ணும். காகம் எளியோர் படைக்கும் உணவை உண்ணும். சிறு உணவெனினும் அதை காகம் பகிர்ந்துண்டு உண்ணும். ஒரு காகம் இறந்தால் மற்றவை ஒன்று கூடும். பருந்து தனது வேட்டையை தனித்தே ருசிக்கும். பிற பருந்தின் சோகத்தில் காகத்திற்கு ஈடாக பங்கேற்காமல் சுயநலத்துடன் தனியே வானில் திரியும்.

'தல' தோனியின் முதல் படம் டக் அவுட்டா.. பிக்கப்பா..? 'LGM' முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்!

உயரே பறப்பது மட்டுமே உயர்குணம் ஆகாது. கருமை நிறத்தில் இருப்பதால் பருந்தை விட காகம் தாழ்ந்தும் போகாது. நீயும் கருப்புதான் என்பதை நினைவில் கொள்.. காமடி பருந்தே!! இதை சொன்னாலும் பருந்தின் மண்டையில் ஏறாது. ஏறினாலும் ஏறாதது போல் நடிக்கும். யாரை காகமென்று கூறினார் என்று சமூக வலைத்தளம் எழுதுமாம். ப்ளூ சட்டை என தைரியமாக மேடையில் கூற பருந்திற்கு திராணி இல்லை. ஆகவே அல்லக்கைகளை உசுப்பி விடுகிறது. இதற்கெல்லாம் காகம் அசரவே அசராது. பருந்தின் வண்டவாளங்கள் தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்றப்படும். இப்படிக்கு, அண்டங்காக்கை. என்று கூறி அந்த பதிவை முடித்துள்ளார். 

அவர் இந்த பதிவை போட்ட நிலையில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள், ரஜினி மாறனை பற்றி பேசவில்லை என்றும், அந்த அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும் கூறி, தொடர்ச்சியாக அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

மேலும் அந்த பதிவில் கமெண்ட் போட்டுள்ள ட்விட்டர் பயனாளர் ஒருவர், சில தினங்களுக்கு முன்பு மாவீரன் படத்தின் வசூல் பற்றி பேசும்போது, OVOP என்ற கெட்ட வார்த்தையை பதிவிட்டு கலாய்த்த மாறனை, அதே வார்த்தையை மீண்டும் மாறனுக்கே பிரயோகப்படுத்தி அவரை திட்டித் தீர்த்துள்ளார்.

ஏம்மா இப்போ இது ரொம்ப அவசியம்மா? கை - கால் செயலிழந்த குணசேகரனை காண்டாக்கிய நந்தினி!

Follow Us:
Download App:
  • android
  • ios