Asianet News TamilAsianet News Tamil

நான் சொன்ன கதையத்தான் மேடைல உருட்டிட்டு இருந்தியா? விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு உரிமை கொண்டாடும் ப்ளூ சட்டை

லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தன்னுடையது எனக் கூறி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Blue sattai maaran claims vijay Kutty story in Leo success meet is copied one gan
Author
First Published Nov 3, 2023, 10:46 AM IST | Last Updated Nov 3, 2023, 10:46 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது. குறிப்பாக ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த லியோ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த நவம்பர் 1-ந் தேதி சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. 

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், நடிகை திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித், இயக்குனர் கவுதம் மேனன், மிஷ்கின் என படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய்யின் பேச்சு அதிகளவில் கவனம் பெற்றது. குறிப்பாக சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று விஜய் பேசி அப்ளாஸ் வாங்கினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Blue sattai maaran claims vijay Kutty story in Leo success meet is copied one gan

பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வகையில் லியோ சக்சஸ் மீட்டிலும், ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். அதில் காட்டுக்கு வேட்டைக்கு போகும் வேடர்கள் இருவரில் ஒருவர் முயலை வேட்டையாடி முதலில் வந்ததாகவும் இன்னொரு யானைக்கு குறிவைத்து அதனை பிடிக்க முடியாமல் தோல்வியுடன் திரும்பியதாகவும் கூறி, இதில் முயலை வேட்டையாடியவரை விட யானையை வேட்டையாட நினைத்தவரே வெற்றிபெற்றவர் என்று கூறிய விஜய், எப்போதுமே அவரைப்போல் நம்முடைய இலக்கை பெரிதாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நடிகர் விஜய் சொன்ன இந்த கதையை தான் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டதாக கூறி உள்ள ப்ளூ சட்டை மாறன், இதைத்தான் நேத்து.. மேடைல உருட்டிட்டு இருந்தியா? என விஜய்யை கிண்டலடிக்கும் விதமாக மீம் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

"கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்கிற திருக்குறளை மையமாக வைத்து தான் விஜய் அந்த கதையை சொன்னதாகவும், இதை உங்க கதைனு சொல்றீங்களே நீங்க எப்போ சார் திருவள்ளுவர் ஆனீங்க என கிண்டலடித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... இனி விஜய் - அஜித் போட்டியல்ல.. விஜய் - ரஜினி போட்டி தான்? - திருக்குறளில் இருந்து குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios