Asianet News TamilAsianet News Tamil

இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்... நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம்!

நடிகர் சூர்யா தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த கல்வி கொள்கை, நீட் தேர்வு, மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த முறைகளுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் இயற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
 
BJP youth resolution against actor Surya
Author
Chennai, First Published Jul 4, 2021, 4:25 PM IST

நடிகர் சூர்யா தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த கல்வி கொள்கை, நீட் தேர்வு, மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த முறைகளுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் இயற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

மேலும் செய்திகள்: முதுகு முழுவதையும் காட்டி... சைடு போஸில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா..! ஓவர் ஹாட் போட்டோஸ்!
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். இவருக்கு ஆதவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இவரது தொடர்ந்து புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து , அவரது சகோதரர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.

BJP youth resolution against actor Surya

இது மட்டும் இன்றி ஏற்கனவே நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, என தொடர்ந்து  மத்திய அரசின் திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருவதால் பாஜக இளைஞரணி இவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியள்ளது. 

மேலும் செய்திகள்: பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!
 
BJP youth resolution against actor Surya

தமிழ்நாடு மாநில பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் கூறுகையில், "மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்புகிறார் நடிகர் சூர்யா. மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளவேண்டும் இல்லை என்றால் அவர் மீது உரிய நடவடிக்க எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios