Asianet News TamilAsianet News Tamil

“தில்லு முல்லு கழகமே.. திருந்தாத தள்ளுமுள்ளு கழகமே”... பாடல் மூலம் திமுகவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்!

தற்போது மக்கள் மத்தியில் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், வாக்குறுதிகளையும் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

BJP Gayathri raguram slams DMK Leader Stalin Fake Election campaign in song going viral
Author
Chennai, First Published Feb 15, 2021, 2:40 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீயாய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக பாஜகவை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் கவர்ச்சிக்காக திரைப்பிரபலங்களை கட்சியில் இணைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் நமீதா, குஷ்பு, காயத்ரி ரகுராம் ஆகியோர் களத்தில் இறங்கி மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் ஈர்த்து வருகின்றன. 

BJP Gayathri raguram slams DMK Leader Stalin Fake Election campaign in song going viral

அதிலும் குறிப்பாக நடிகையும், பாஜக கலை கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவருமான காயத்ரி ரகுராம், தனக்கு ஒதுக்கப்பட்ட கலையைக் கொண்டு பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலால் கந்த சஷ்டி கவசம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அப்போது கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கூட்டத்திற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக “வெற்றிவேல்,வீரவேல்” என்ற பாடலை இசையமைப்பாளர் தீனாவுடன் இணைந்து தயாரித்து, வெளியிட்டார். அந்த பாடல் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

BJP Gayathri raguram slams DMK Leader Stalin Fake Election campaign in song going viral

தற்போது மக்கள் மத்தியில் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், வாக்குறுதிகளையும் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினின் உளறல் பிரச்சாரத்தில் ஆரம்பித்து 2ஜி ஊழல் வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி காயத்ரி ரகுராமே எழுதி, தயாரித்துள்ள “தில்லு முல்லு கழகமே” என்ற பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கலைஞரின் மகன் என்று சொல்லிக்கொண்டு தமிழில் சாதாரண வார்த்தைகளை பேச கூட ரோலிங் ஆகும் ஸ்டாலினை கார்ட்டூனாக சித்தரித்து வெளுத்து வாங்கியிருக்கிறார் காயத்ரி ரகுராம். இதோ அந்த பாடல்... 

"

Follow Us:
Download App:
  • android
  • ios