திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எமி ஜாக்சனை தொடர்ந்து, அஜித் நடித்த 'பில்லா 2 ' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த புரூனா அப்துல்லா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த புரூனா ' i hate love story ' என்ற பாலிவுட் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக ஆனார்.  இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்த 'பில்லா 2 ' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

மேலும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.  கடந்த சில வருடங்களாக ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை காதலித்து வந்தார்.  சமீபத்தில் தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் புரூனா அப்துல்லா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். மேலும் இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பதையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை எமிஜாக்சன் திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்று கொள்ளும் நிலையில், அஜித் பட நாயகியும் இதே லிஸ்டில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.