Valathuvashathe Kallan Poster Released : ஜீத்து ஜோசப் இயக்கும் 'வலதுவஷத்தே கள்ளன்' என்ற புதிய படத்தில் பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரை தொடர்ந்து தற்போது மலையாள நடிகர்கள் தமிழில் அதிக கவனம் ஈர்த்து வருகின்றனர். அவர்களில் ஜோஜூ ஜார்ஜூம் ஒருவர். இவர் இயக்கி நடித்த பணி என்ற படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்தார். சிம்புவின் தக் லைஃப் படத்திலும் நடித்திருந்தார். அதற்கும் முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.

இப்படி மலையாள நடிகர்களுக்கும் தமிழ் சினிமா வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் ஜோஜூ ஜார்ஜ் இப்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வலதுவஷத்தே கள்ளன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான 'வலதுவஷத்தே கள்ளன்' படத்தின் புதிய போஸ்டர் கவனம் ஈர்த்து வருகிறது. வெவ்வேறு முகபாவனைகளில் பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜை போஸ்டரில் காணலாம். ஆகஸ்ட் சினிமா பேனரில் ஷாஜி நடேசன், பேட் டைம் ஸ்டோரிஸுடன் இணைந்து 'வலதுவஷத்தே கள்ளன்' தயாரிக்கப்படுகிறது. கெட்டினா ஜீத்து, மிதுன் ஆபிரகாம் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்கள். சினி ஹாலிக்ஸ் நிறுவனத்தின் டான்சன், சுனில் ராமாடி, பிரசாந்த் நாயர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்கள்.

சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் உள்ள இரண்டு நபர்களின் வாழ்க்கையில் நிகழும் மோதல்களை, ஒரு எமோஷனல் டிராமாவாக, முழுமையான த்ரில்லர் பாணியில் ஜீத்து ஜோசப் வழங்குகிறார். லீனா, நிரஞ்சனா அனூப், இர்ஷாத், ஷாஜு ஸ்ரீதர், இயக்குனர் ஷ்யாமபிரசாத், மனோஜ் கே.யு, லியோனா லிஷாய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டினு தாமஸ் ஈலான் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இதற்கு முன் 'கூதாஷா' என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

View post on Instagram