Asianet News TamilAsianet News Tamil

ஓடிடி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்... பிரதமரிடம் வைத்த அதிரடி கோரிக்கை...!

சமீபத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளால் தடை செய்யப்பட்ட காட்மேன் வெப் சீரிஸ் இதற்கு சிறந்த உதாரணம். 

Bihar CM Nithish Kumar Writes Letter to PM Modi request censorship for OTT Platform
Author
Chennai, First Published Jun 22, 2020, 7:40 PM IST

கொரோனா லாக்டவுனில் வீட்டிற்குள் முடங்கியுள்ள ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி எனப்படும் ஆன்லைன் பிளாட்பார்கள் தான். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ் பிளேயர், ஜீ5 அளவில்லாத படங்களை கொண்ட ஆன்லைன் தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போதைய ஆன்லைன் யுகத்தில் இணையத்தின் பயன்படும் ஏகத்திற்கு அதிகரித்துள்ளதால், ஆன்லைனில் படம் பார்ப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 

Bihar CM Nithish Kumar Writes Letter to PM Modi request censorship for OTT Platform

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்காக ஆன்லைனில் ஆபாச படம் பார்ப்பவர்களை கண்டறிந்து களையெடுக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆபாச தளங்கள் முடக்கம், செல்போன் மூலம் அந்த மாதிரியான படங்களை ஷேர் செய்தால் கைது என அதிரடி நடவடிக்கைகள் தூள் பறக்கின்றன. இது ஒருபுறம் என்றால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெப் சீரிஸ் என்ற பெயரில் கொட்டி கிடக்கும் ஆபாச படங்களை நீக்க போவது யார்?  என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Bihar CM Nithish Kumar Writes Letter to PM Modi request censorship for OTT Platform

 

இதையும் படிங்க:  பெரிய இடத்து மாப்பிள்ளையான ஐ.ஜி. மகன்... வருங்கால கணவரை இறுக்கி அணைத்த படி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை...!

உலகம் முழுவதும் ட்ரெண்டான கேம் ஆஃப் த்ரோன்ஸ் அதிக பார்வையாளர்களை பெற காரணம் அதில் இருந்த நிர்வாண காட்சிகள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு வெப் சீரிஸ் வெற்றி பெற வேண்டும் என்றாலே இடையே இடையே பிட்டு சீன் போல், அந்த மாதிரி காட்சிகளை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆன்லைன் தளங்கள் மாறிவருகின்றன. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு என்று தனியாக சென்சார் போர்டு கிடையாது. அதனால் காண சகிக்காத ஆபாச காட்சிகள், கேட்க முடியாத அசிங்கமான வசனங்கள், முழு நிர்வாணத்துடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் என கண்டமேனிக்கு இருப்பது இளம் தலைமுறையினரை சீரழிப்பதாக கூறப்படுகிறது. 

Bihar CM Nithish Kumar Writes Letter to PM Modi request censorship for OTT Platform

 

இதையும் படிங்க: நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!

சமீபத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளால் தடை செய்யப்பட்ட காட்மேன் வெப் சீரிஸ் இதற்கு சிறந்த உதாரணம். சமீப காலமாக ஓடிடி தளத்திற்கு என தனியாக சென்சார் போர்டு வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் வீடியோக்களை சென்சார் செய்ய தணிக்கை குழுவை அமைக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரிக்க காரணம் ஓடிடி தளங்கள் தான் என குற்றஞ்சாட்டியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios