Asianet News TamilAsianet News Tamil

இந்த விஷயத்திலும் விஜய் தான் டாப்பு... சத்தமே இல்லாமல் சூப்பர் ஸ்டார், தல படங்களை பின்னுக்குத் தள்ளிய "பிகில்"...!

அதே சமயத்தில் கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அஜித்தின் "விஸ்வாசம்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" ஆகிய படங்கள் மிகப்பெரிய வித்தியாசத்துடன் பின்னடைவை சந்தித்துள்ளன. 

Bigil Trailer Won Viswasam and Petta Movie Trailer
Author
Chennai, First Published Dec 26, 2019, 7:22 PM IST

தீபாவளியை முன்னிட்டு விஜய் - அட்லி கூட்டணியில் திரைக்கு வந்த திரைப்படம் "பிகில்". வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக விஜய் நடித்திருந்த அப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இப்படம் திரைக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இப்படி ஒரு சாதனையை படைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்ன சாதனை என கேட்கிறீங்களா?. அக்டோபர் 12ம் தேதி வெளியான "பிகில்" படத்தின் டிரெய்லரை இதுவரை 48 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதால், "பிகில்" திரைப்படம் இந்திய படங்களிலேயே அதிகம் லைக் செய்யப்பட்டது என்ற கூடுதல் பெருமையை பெற்றுள்ளது. 

Bigil Trailer Won Viswasam and Petta Movie Trailer

அதே சமயத்தில் கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அஜித்தின் "விஸ்வாசம்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" ஆகிய படங்கள் மிகப்பெரிய வித்தியாசத்துடன் பின்னடைவை சந்தித்துள்ளன. அதில் வரிசைப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது நம்ம தல நடித்த "விஸ்வாசம்" திரைப்படம். இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு தல பொங்கல் என்று சொல்லும் அளவிற்கு பேமிலி எண்டர்டெயின்மெண்ட் மூவியான "விஸ்வாசம்" செம்ம மாஸ் காட்டியது. 

Bigil Trailer Won Viswasam and Petta Movie Trailer

விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியாகி இதுவரை 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில், யு-டியூப்பில் இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். 13 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 

Bigil Trailer Won Viswasam and Petta Movie Trailer

அடுத்ததாக அதே பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தின் டிரெய்லரை 26 கோடி பார்வையாளர்கள் மட்டுமே கண்டு ரசித்துள்ளனர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரிதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இல்லாதேதே காரணம் என்று கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios