'பிகில்' திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை நாளை வெளியாக உள்ளது. இந்த செய்தியை நேற்றைய தினம் கூட 'பிகில்' படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை குஷியாக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் ரசிகர்கள் அனைவராலும் வைரலாக பார்க்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது அட்லீ, விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று மாலை 4 : 30 மணிக்கு, நயன்தாரா மற்றும் விஜயின் டூயட் பாடலான 'உனக்காக' சிங்கிள் பாடல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நயன்தாரா... விஜய்யின் தோள் மீது சாய்ந்திருக்கும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே, இந்த 'பிகில்' படத்தில் இருந்து வெளியான, முதல் சிங்கிள் பாடலான 'சிங்க பெண்ணே' மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடலான, 'வெறித்தனம்' ஆகியவை அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டும், அதிக படியான லைக்குகளை பெற்றும் சாதனை படைத்தது.

 

இதனால், இன்று வெளியாக உள்ள இந்த காதல் பாடலும் சாதனை பாடலாகவே அமையும் என தெரிகிறது. மேலும் இந்த பாடலை வைரலாக்கும் முயற்சியில் இப்போதே இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.