அட்லீ இயக்கத்தில் 'தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி படத்தின் அப்டேட் பற்றி, விஜய் ரசிகர்கள் படக்குழுவினரிடம் கேட்டு வந்தனர்.

ஏற்கனவே விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மற்றும் செகண்ட்லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  இன்று மாலை 6 மணிக்கு புதிய வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், பிகில்' படத்தின் அப்டேட் பற்றி வெளியிட்டுள்ளார்.  சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்காத அதே நேரத்தில் ஆச்சரியப்படும் ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும்  சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

ஏற்கனவே பிகில் படத்தின் அப்டேட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த தகவல் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அப்படி இந்த படம் குறித்து என்ன தகவல் வர போகிறது என்பது இன்று 6 மணிவரை பொறுத்திருந்து பார்ப்போம்.