'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் தலை தூக்கி வருகிறது.

அதில் ஒன்று தான், 'பிகில்' படத்தின் கதை தன்னுடையது என, துணை இயக்குனர் செல்வா, வழக்கு தொடர்ந்தது. இவர் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை,  கீழமை நீதி மன்றம் நிராகரித்தால்,  தகுந்த ஆதாரங்களோடு, செல்வா, உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், கே.பி.செல்வா, உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதி மன்றம், செல்வா 'பிகில்' காப்புரிமை கூறி வழக்கு தொடரலாம் என அனுமதி அளித்துள்ளது. மேலும் கீழமை நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

'பிகில்' படம் வெளியாக ஒரு சில நாட்களே உள்ள நிலையில், செல்வா இந்த படத்தின் கதைக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தால். பிகில் படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் புதிய சிக்கல் ஏற்படுவது உறுதி. எனவே தற்போது பிகில் திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை எழுந்துள்ளது. 

துணை இயக்குனர் செல்வாவிற்கு ஆதரவாக உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது, படக்குழுவினரை மட்டும் இன்றி, ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.