தீபாவளியை முன்னிட்டு விஜய் - அட்லி கூட்டணியில் திரைக்கு வந்த திரைப்படம் பிகில். வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக விஜய் நடித்திருந்த அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும்,  அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கி வருகிறது. 

 

அட்லீ இயக்கிய பல படங்கள் கதை திருட்டு பிரச்னையில் சிக்கின. இதனால் காப்பி பெஸ்ட் இயக்குநருனு பெயர் எடுத்த அட்லீ, 'பிகில்' படத்தில் வரும் காட்சிகளை  பல படங்களில் இருந்து காப்பி அடித்ததாக சர்ச்சைகள் எழுந்தது. இதுபோதாதுன்னு, படத்தின் காட்சிகள் எந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதுன்னு, வீடியோ ஆதாரங்கள் மூலம் நெட்டிசன்கள் நிரூபிச்சிக்கிட்டு வர்றாங்க.

 "பிகில்" படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அந்த சீன் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிச்சது, இந்த சீன் வைரல் வீடியோவை பார்த்து சுட்டதுன்னு நெட்டிசன்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர்.  சில காட்சிகள் அப்பட்டமாக அப்படி காப்பியடிக்கப்பட்டது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அட்லியை வேற லெவலுக்கு வச்சி செய்தனர். 

இந்நிலையில் "பிகில்" படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் ஹாலிவுட் படத்தில் இருந்து சுடப்பட்டதாக வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. மிரக்கிள் என்ற ஹாலிவுட் படத்தில் வரும் காட்சியை அப்படியே "பிகில்" பட கிளைமேக்ஸிற்கு பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இன்னும் எதையெல்லாம் எங்கிருந்து காப்பியடிச்சீங்க என அட்லியை வறுத்தெடுத்து வருகின்றனர்.