தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் 'பிகில்' என நேற்று அவரது பிறந்தநாளை, முன்னிட்டு வெளியானது.

இதைத்தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள, நடிகை நயன்தாராவின், பெயர் என்ன என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி, படத்திற்கு பின் அட்லீ இயக்கத்திலும், நீண்ட இடைவெளிக்கு பின் விஜயுடனும், இந்த படத்தில்  நடித்து வரும் நயன்தாரா, 'ஏஞ்சல்' என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

விஜய் லோக்கல் டான், கால் பந்து பயிற்சியாளர் என இரட்டை வேடத்தில் நடித்து வரும், இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.