விஜய் நடித்த பிகில் படம் இதுவரை அவர் நடித்த படங்களை விட மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

தீபாவளிக்கு பிகிலுடன் வெளியாகி உள்ள கைதி படம் தரமாக இருப்பதாகவும், பிகில் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா பாக்ஸ் ஆபீஸ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், மிகவும் மோசமான படம். இயக்குநர் அட்லி சுமாரான கதை, திரைக்கதையை அமைத்துள்ளார்.

 

நடிகர் விஜயின் நடிப்பும், ஆக்சன்களும் மோசமாக உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதாரண இசையை கொடுத்துள்ளார். க்ராபிக்ஸ் காட்சிகள் சுமாராக உள்ளது. ஆக மொத்தத்தில் பிகில் படம் தவறாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு சிரிக்கிறார்கள். ஆகையால் இந்த படத்தை பார்த்து நேரத்தை வீணாக்காமல் தயவு செய்து தீபாவளி கொண்டாடுங்கள் என அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

 

அத்தோடு ரேட்டிங்க் அளவாக ஐந்து புள்ளிகளுக்கு 1.5 ஸ்டார் ரேட்டிங்கை வழங்கியுள்ளது இந்தியா பாக்ஸ் ஆபீஸ்1.