தெறி, மெர்சலை அடுத்து நடிகர் விஜயுடன் இணைந்து மூன்றாவது படமான பிகிலை இயக்கியுள்ளார் அட்லி. இது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகெங்கும் ரிலீசானது.

ஏராளமான சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி பிகில் படம் திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே வர்த்தக ரீதியில் 200 கோடிக்கு மேல் விற்பனையானது.

அதேபோல், சென்னையில் மட்டும் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சுமார் 180 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள பிகில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், தமிழகத்தில் மட்டும் பிகில் முதல் நாள் வசூல் 25.6 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் ஒரு தமிழ் படத்தின் வசூல் 4.12 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது விஜயின் பிகில். மேலும் இரண்டாம் நாளான இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது.

அதேபோல், அமெரிக்காவில் மட்டும் பிகில் படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடியே 54 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. அதாவது 5 லட்சம் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது.


கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வழக்கம் போல நடிகர் விஜய் ரசிகர்களை பிகில் படம் பெருவாரியாக ஈர்த்துள்ளதால் இந்த அபார வசூலை பெற்றுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.