கடந்த தீபாவளியன்று விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. பிகில் திரைப்படம் வெளிவருதற்கு முன்பு பிரமோஷன் பெரிய லெவலல் இருந்தது. பிகில் திரைக்கு வரும்போது ஏன் தேவையில்லாமல் கைதி படத்தை ரிலீஸ் செய்து ரிஸ்க் எடுக்கிறார்கள் என பேசப்பட்டது.

ஆனால் படங்கள் திரைக்கு வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிகில் படம் 100 கோடி வசூல் 200 கோடி வசூல் என தகவல் வெளியானது. பிகில் எதிர்பர்த்த அளவு இல்லாத நிலையில் வலுவான கதை மற்றும் திரைக்கதையால் கைதி படம் ரசிகர்களை ஈர்த்தது.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் ஒரு பேட்டியில், பிகில் படம் பெரும் வெற்றி, வசூல் வேட்டை, 200 கோடி வசூல் என்றெல்லாம் என்று பலர் பரப்பிவருகின்றனர். அப்படியெல்லாம் பெரிய வெற்றி ஒன்றும் இல்லை, ஐந்தாவது நாளே படுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு நாள் நன்றாக வசூல் ஆனது, நாட்கள் செல்ல செல்ல வசூல் குறைந்து, ஐந்தாவது நாள் படுத்துவிட்டது என்று அவர் கூறினார்.

படத்தின் இயக்குனர் அட்லீ தேவையில்லாமல் பல செலவுகளை செய்து படத்தின் பட்ஜெட்டை உயர்த்திவிட்டார் என்றும், அந்த தொகையை மீட்பது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார். 

அதே நாளில் குறைந்த செலவில் எடுத்த கைதி படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்றார். 2019 ஆம் ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை மற்றும் பேட்ட திரைப்படங்கள் தான் நல்ல வசூலைக் கொடுத்துள்ளது என்றும், தற்போது கைதி நல்ல வசூலை தநது கொண்டிருப்பதாகவும் ராஜன் தெரிவித்தார்.