ஏற்கனவே கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள பிக்பாஸ் செம ஹிட் பரப்பி வருகிறது..இந்நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..
உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் இந்நிகழ்ச்சியை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச் செல்வி, பைனலுக்கு முன் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிகச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளது. அதன்படி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார் தாமரை. கடந்த வாரம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில்இன்று ஹவுஸ் மேட்டில் யாருக்கு எந்த இடம் என எழுதும் படி சொல்லப்படுகிறது..அப்போது இந்த வார தலைவராக இருக்கும் ஷாருக் சுரேஷிடம் நீங்கள் கொளுத்திப்போட்டு பரபரப்பாக வைத்திருப்பதாவும், வனிதாவின் கோபம்,அடமண்ட் அனைவரையும் பதிப்பதாகவும் கூறுகிறார்..அதோடு தமரியிடம் உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாதது போல நடிக்காதீர்கள் என முகத்தில் அறைந்தார் போல தெரிவிக்கிறார் ஷாருக்...
