பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், சற்று முன்னர் தொகுப்பாளர் கமலஹாசன், மக்கள் தீர்ப்பே உறுதியானது என போட்டியாளர்கள் உணரும் நாள் நெருங்கி விட்டது என, அழுத்தம் திருத்தமாக எடுத்து கூறும் புரோமோ வெளியாகியுள்ளது.

நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் மகிழ்சியில் துள்ளி குதித்த போட்டியாளர்களுக்கு, இன்று சற்று துக்கமான நாள் என்றே கூறலாம். காரணம் இன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். நாமினேஷன் பட்டியலில் அனிதா, ஆரி, ஆஜித், கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும் இவர்களில் ஒருவர் வெளியேற உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், "நீங்க தப்பு பண்றீங்க, அப்படினு சுட்டி காட்டுனா... நான் மட்டுமா தப்பு பண்ணுறேன்னு எதிர் கேள்வி கேட்குறாங்க. இன்னும் 3 வாரம் தான் இருக்கு. அவங்க தப்ப அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ... நீங்க நல்ல புரிஞ்சி வச்சிருக்கீங்க என்பது நீங்கள் ஓட்டு போட்ட முறையிலேயே தெரிகிறது. மக்கள் தீர்ப்புதான் இறுதியானது என்பதை அவர்களும் உணரும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. என இன்றைய முதல் புரோமோவில் பேசியுள்ளார்.

இதுகுறித்த புரோமோ இதோ...