விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை தட்டிச் சென்றவர் முகேன் ராவ்.  இவருடைய தந்தை நேற்று மாலை 6 : 20 மணியளவில், மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள விஷயம் முகேன் ரசிகர்களையும், அவருடைய குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முகேன் ராவ்வின் தந்தை பிரகாஷ் ராவ். 52 வயதாகும் இவர், தன்னுடைய மகள், மனைவி, மற்றும் மகனுடன் வசித்து வந்தார். பல்வேறு கஷ்டங்கள் வந்த போது கூட, ஒவ்வொரு தருணத்திலும் ஒரு தந்தையாக முகேன் ராவ்விற்கு உறுதுணையாக இருந்தார்.

முகேன் ராவ்விற்கு பாடல்கள் மீது ஆர்வம் வர காரணமும், அவருடைய தந்தை பிரகாஷ் ராவ்தான். முகேன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு இண்டிபெண்டண்ட் சிங்கராக பாடி, நடித்த ஆல்பம் பாடல்கலான 'போகிறாய்' மற்றும் 'அபிநயா' ஆகியவை சமூக வலைத்தளத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய, சிறந்த குணத்தாலும், அழகிய குரலாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்து, அதிகப்படியான ஓட்டுகளை பெற்று, பிக்பாஸ் சீசன் 3  பட்டத்தை வென்று, 50 லட்சம் பரிசை தன்வசமாக்கிய முகேன் மலேசியன் தமிழனின் என்றாலும் தமிழக மக்கள் பலர் தங்களில் ஒருவனாகவே அவரை நினைக்கின்றனர்.

இந்நிலையில் முகேன் தந்தை பிரகாஷ் ராவ், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ரசிகர்கள் பலர் தொடருந்து முகேன் ராவின் தந்தைக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.